கருத்தே தெரிவிக்கக்கூடாது என கருத்துக் கூறிய கடம்பூர் ராஜூ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சோதனை நீடிக்கும் வேளையில் கருத்து தெரிவிக்கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 


Advertisement

சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் அரசியல் சூழலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இதற்கு அதிமுகவினர் பலரும் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். 

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கடம்பூர் ராஜூ, “வருமான வரித்துறை என்பது மத்திய அரசின் ஒரு அமைப்பு. அந்த பணிகள் குறித்து கருத்து சொல்வதற்கு இல்லை. வருமான வரித்துறையினர் தகவல்களின் அடிப்படையில் சோதனை மேற்கொள்கிறார்கள். சோதனை நடைபெறுவது குறித்தும் கருத்து சொல்லக்கூடாது. அத்துடன் சோதனைப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாலும் கருத்து சொல்லக்கூடாது.  இந்நேரத்தில் கருத்து சொல்வது சரியாகவும் இருக்காது” என்று கூறினார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement