வேதா இல்லத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: திவாகரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போயஸ் தோட்ட இல்லத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். 


Advertisement

சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். 

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “நான் போயஸ் கார்டனுடன் ரொம்ப நாட்களாக தொடர்பில் இல்லாத நபர். அதனால் எங்கு சோதனை, என்ன ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரியவில்லை. என்னுடைய கல்லூரியிலோ அல்லது வீட்டிலோ அதுபோன்ற பெண்ட்ரைவ் அல்லது சிடி கைப்பற்றப்படவில்லை. எனக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை குறித்து ஆஜராகுமாறு தேதி குறிப்பிடப்படவில்லை. தேவைப்பட்டால் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளனர்” என்று கூறினார். 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement