உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: அரையிறுதியில் ஃபெடரரை எதிர்கொள்ளும் கோஃபின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 


Advertisement

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு நிகராக கருதப்படும் இந்தப்போட்டி ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் நடைபெறும். தரநிலையில் டாப் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் தனது கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தைமை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய கோபின் 6-4 கணக்கில் முதல் செட்டை போராடி வென்றார். இரண்டாவது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஃபின் 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார். 

இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து விளையாடவுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement