ரெய்டு குறித்து வருமான வரித்துறைதான் பதில் சொல்ல வேண்டும்: துரைமுருகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது என வருமான வரித்துறையினர்தான் பதில் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.


Advertisement

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய துரைமுருகன், "இதுபற்றி கருத்து எதுவும் சொல்வற்கு தயாராக இல்லை. காரணம், போயஸ் கார்டனில் என்ன நடந்தது? என்பது எங்களுக்குத் தெரியாது. எந்த முகாந்திரத்தின் அடிப்டையில் ரெய்டு நடத்துகிறார்கள் என்பதும் தெரியாது. வருமான வரித்துறையினர்தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

தமிழக மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்கும் முயற்சியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளதை வரவேற்பதாகவும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து பேசிய துரைமுருகன், மத்திய அரசின் நிறுவனம்தான் இங்கு ரெய்டு நடத்துகிறார்கள். எனவே ரெய்டை அவர் வரவேற்கத்தான் செய்வார் என்றார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement