குழப்பத்தில் ஆஸி. அணி: ஷேன் வார்ன் சாடல்!

Aussies-in--confusion--ahead-of-Ashes--Shane-Warne

’ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இப்போது குழப்பத்தில் இருக்கிறது, உள்ளூர் அணியில் விளையாடாதவர்களை கூட அணியில் சேர்த்துள்ளனர்’ என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் கூறியுள்ளார்.


Advertisement

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பிரிஸ்பேனில் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான இந்த அணியில், 7 ஆண்டுகளுக்கு பிறகு விக்கெட் கீப்பர், டிம் பெய்ன் இடம் பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், பார்மில் இல்லாததால் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னணி பந்துவீச்சாளர்களும் சேர்க்கப்படவில்லை. இதற்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் கூறும்போது, ‘ஆஸ்திரேலிய அணி குழப்பத்தில் உள்ளது. உள்ளூர் அணியில் கூட விக்கெட் கீப்பிங் செய்யாதவரை தேசிய அணிக்கு தேர்வு செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து இப்போது சிறப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவை கண்டு அவர்கள் பயப்படமாட்டார்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவை வெல்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement