[X] Close >

பேரறிவாளன் விடுதலை?: தமிழக அரசு மெளனமாக இருப்பதாக ஸ்டாலின் சாடல்

DMK-Stalin-Slams-TN-Government

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்டனர். பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்த விதத்திலேயே சந்தேகங்களை எழுப்பி, அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ.விசாரணை அதிகாரியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் “பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு கருணை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 


Advertisement

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “மத்திய புலனாய்வு துறை விசாரித்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்” என்று தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்காமல் மவுனமாக இருப்பதால்,பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையாக முடியவில்லை. 

அதிமுக அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கான அனுமதியை மீண்டும் பெற மத்திய அரசை உடனடியாக அணுக வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு கேட்டுள்ள அனுமதியை பெற்று பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மத்திய அரசுடன் சுமூக உறவு வைத்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த தலைமை செயலாளர்கள் மத்திய அரசுக்கு இது தொடர்பாக எழுதிய கடிதங்களின் மீது தொடர் நடவடிக்கையை தனி கவனத்துடன் தலைமைச் செயலாளர் அவர்களும் எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close