[X] Close >

தனித்திருக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளை: பட்டதாரி இளைஞர்  கைது

Chennai-Theft-Youth-Arrest

சென்னையில் வீட்டில் தனியாக வசிக்கும் பெண்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகைகள் பறித்த புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்து வருவதாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இது குறித்து சைதாப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில், கிருஷ்ணகிரியை சேர்ந்‌த‌ பட்டதாரியான அறிவழகன் என்பவர் பிடிபட்டார். சென்னை கிண்டியில் தங்கியிருந்த இவர், இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போது கத்தியை காட்டி மிரட்டி 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிவழகன் வாக்குமூலம் ‌அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வ‌ரவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.‌ அறிவழகனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், கொள்ளை‌டித்த நகைகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close