[X] Close >

சானமாவு பகுதியில் 35 யானைகள் முகாம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை

Warning-to-Village-people-due-to-elephant-camp

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் அதிகமான காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், சுற்றியுள்ள கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

கர்நாடகாவின் காவிரி வனவிலங்கு சரணாலயத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்துள்ளன. அவை தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அய்யூர், ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் தனி, தனி குழுவாக முகாமிட்டுள்ளன. இதில் 35-க்கும் அதிகமான யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருக்கின்றன.

இதனால், வனத்தையொட்டியுள்ள கிராம மக்கள் இரவுநேரத்தில் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டின் முகப்பில் விளக்குகளை எரிய விடுமாறும், கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20-க்கும் அதிகமான ஊழியர்கள் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close