வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முட்டை விலை வரலாறு காணாத வகையில் கணிசமாக உயர்ந்திருக்கிறது.


Advertisement

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 16 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்து, முட்டையின் தேவை அதிகரித்ததே, விலை உயர்வுக்கு காரணம் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயரக்கூடும் என்றும் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக சில்லறைக்கடைகளில் முட்டை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஓட்டல்களிலும், தெருவோரக் கடைகளிலும் முட்டை தொடர்பான உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆம்லேட், தற்போது 15 ரூபாய்க்கும், சில இடங்களில் 20 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement