இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் சில சாதனைகள் நிகழ்த்தப்படலாம் என்று தெரிகிறது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 292 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இந்தத் தொடரில் அவர் 8 விக்கெட்டுகளை எடுத்தால் வேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
1982-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விளையாடி வருகிறது இலங்கை அணி. 17 டெஸ்ட்களில் விளையாடி 10-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டு இருக்கிறது. இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்பது அந்த அணியின் கனவு. இந்தத் தொடரில் ஒரு டெஸ்ட்டில் வெற்றிபெற்றால் கூட, இந்திய மண்ணில் அந்த அணி பெறும் முதல் டெஸ்ட் வெற்றியாக இருக்கும்.
இலங்கைக்கு எதிராக அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன்களில் அசாருதீனும், விராத் கோலியும் தலா 5 வெற்றிகளுடன் இருக்கிறார்கள். இந்த தொடரில் அசாருதீன் சாதனையை கோலி முறியடிப்பார் என்று தெரிகிறது.
கோலி, இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 19 வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். இன்னும் 2 வெற்றி பெற்றால், டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில், 2-வது இடத்தில் இருக்கும் கங்குலியை (21 டெஸ்ட்) சமன் செய்வார். இந்த சாதனை பட்டியலில் தோனி 27 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
2016-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விராத் கோலி, 4803 பந்துகளை எதிர்கொண்டு விளையாடியிருக்கிறார். சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் 7032 பந்துகளையும் ஜடேஜா 6346 பந்துகளையும் வீசியுள்ளனர்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள், சச்சின் 1995 ரன் (25 டெஸ்ட்), ஜெயவர்த்தனே (இலங்கை)- 1822 ரன் (18 டெஸ்ட்).
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?