திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் விசாரணை கைதிகளிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புழல் சிறையில் தங்கியிருக்கும் விசாரணை கைதிகளிடம் செல்ஃபோன், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக சிறப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் திடீரென்று விசாரணை கைதிகள் தங்கிருந்த அறையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செல்போன்கள், 2 சிம்கார்டுகள், 2 சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளும் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, செல்போன்களை பதுக்கி வைத்திருந்த கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் உள்ள பிற அதிகாரிகள் செல்போன்கள் பயன்படுத்த கைதிகளுக்கு உதவி இருந்தால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.சிறைக் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் கருவிகளை பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading More post
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி