ராட்சத அலையில் சிக்கிய மீனவர்: தேடும் பணிகள் தீவிரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை‌ கிழக்கு கடற்கரை சாலை அ‌ருகே கடலில் மீன்பிடிக்கச் சென்றவர் திரும்பிவராததால், அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 


Advertisement

பாலவாக்கம் மீன குப்பத்தைச் சேர்ந்த விஜயரத்தினம் மற்றும் தேசிங்கு ஆகியோர் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய விஜயரத்தினம், படகிலிருந்து நிலை தடுமாறி கடலில் வீழ்ந்து முழ்கியிருக்கிறார்.‌ உடன் சென்ற தேசிங்கு நீண்டநேரம் தேடியும் விஜயரத்தினம் கிடைக்காததால், கரைக்கு திரும்பி மற்ற மீனவர்களிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். 

அதையடுத்து, 12 பேர் படகுகளில் கடலுக்குச் சென்று காணாமல் போனவரை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு துறை விரைந்து செயல்பட்டு விஜயரத்தினத்தை மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement