ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை மத்திய அரசு விடுவிக்க விரும்புகிறதா இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை சதித் திட்டத்தின் பின்னணி குறித்து விசாரிக்க 1999-ஆம் ஆண்டு எம்டிஎம்ஏ என்ற (Multi Disciplinary Monitoring Agency) விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த எம்டிஎம்ஏ விசாரணை அறிக்கையை தனக்கு வழங்கக் கோரி ராஜீவ் கொலை வழக்கில், வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ்காந்தி கொலைக்காக பேட்டரி வாங்கிக் கொடுத்தேன்
என்பதுதான் என்மீதான குற்றச்சாட்டு. ஆனால் வெடிகுண்டில் வைக்கப்பட்டது நான் வாங்கி கொடுத்த பேட்டரி என நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என பேரறிவாளன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா இல்லையா என கேள்வி எழுப்பியது. பேரறிவாளன் மனு குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கு விசாரணை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
Loading More post
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்
பகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி