பாகுபலி ஸ்டைலில் சாகசம் செய்ய முயற்சி: இளைஞரை தூக்கி வீசிய யானை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் பாகுபலி பாணியில் யானை மீது ஏற முயன்ற இளைஞரை யானை தூக்கி வீசியது.


Advertisement

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், யானைக்கு பழங்களை வழங்கியுள்ளார். பின்னர் பாகுபலி திரைப்பட பாணியில் யானைக்கு முத்தமிட்ட அவர், அதன் மீது ஏற முயற்சித்தார். இந்த காட்சியை வீடியோவாக தனது நண்பர்களிடம் பதிவு செய்ய சொன்ன அவர், அதனை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்துள்ளார். அப்போது திடீரென அந்த யானை அவரை ஒரே முட்டாக முட்டி, தூக்கி வீசியது. அவ்வாறு தூக்கி வீசப்பட்ட அவர் சில அடிகள் தூரம் சென்று, மடங்கியபடி விழுந்தார். இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement