‘கமல்’ காதல் கடிதம் தீட்டிய குணா குகை விரைவில் திறப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புகழ்பெற்ற குணா குகையை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


Advertisement

கொடைக்கானலில் ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்படும் குகை பகுதி உள்ளது. ஆழமான குகை பகுதி என்பதால் இதற்கு இந்தப்பெயர் வந்தது. கமல்ஹாசன் நடிப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான  குணா படத்தில் இடம்பெறும் “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடல் இந்தக் குகையில் தான் படமாக்கப்பட்டது. இந்தப்படம் வெளியானதற்கு பிறகு இந்த இடத்திற்கு குணா குகை என பெயர் வந்தது. குணா படத்திற்கு பின் இந்த குகை மிகவும் பிரபலமடைந்தது.

கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் தவறாமல் வந்து இந்தகுகைக்கு வருகை புரிந்தனர். குகையை சுற்றி பார்க்க உள்ளே செல்லும் இளைஞர்கள் ஆபத்தான பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். உயிரிழப்புகள் அதிகரித்ததால் 10 ஆண்டுகளுக்கு முன்பு குணா குகை மூடப்பட்டது. தற்போது மரப்பாலத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக நடந்து சென்று குகையின் முகப்பை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் குணா குகை திறக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.
 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement