வெள்ள பாதிப்புகளின் போது தண்ணீரில் செல்லக்கூடிய வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள், சென்னை ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு சிறப்பம்சங்களுடன் அந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுவதாகவும் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு விபத்து மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு குறித்த பட்டறை நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் விஜயாபாஸ்கர், சுகாதார துறைசெயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் TAEI என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "இந்த TAEI செயலியின் மூலம் அரசு மருத்துவமனையின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அடுத்த கட்டமாக விபத்துகளுக்கு உதவும் வகையில் மற்றும் ஒரு செயலியை ஒரு வாரத்திற்குள் அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தண்ணீரில் செல்ல கூடிய அளவிலான ஆம்புலன்ஸ் வசதியைக் கொண்டு வர இருக்கிறோம்.”என்றார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!