புதுச்சேரியில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 அரசுப் பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பணிமனையில் 3 அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பேருந்துகளுக்கு தீவைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்பு பணிமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதில், ஒரு அரசு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமடைந்தது. மற்ற இரண்டு பேருந்துகளில் உள்ள இருக்கைகள் ஒருபுறம் முழுவதும் எரிந்து விட்டன. பேருந்திற்கு வைக்கப்பட்ட தீயால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு