தமிழக முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் 13-ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இடம் பெற்ற மற்ற 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் மற்ற அமைச்சர்களும், அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும், டிடிவி தினகரனும் மரியாதை செலுத்தினர். பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு அதிமுக ஆட்சி தொடரும் எனவும் அவர் கூறினார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் பழனிச்சாமி அளித்த முதல் பேட்டி இதுவாகும்.
Loading More post
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை” - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனா பரவல்: தேர்தல் பேரணிகளை ரத்து செய்த ராகுல் காந்தி
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி