அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 27 பேர் பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 27 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Advertisement

டெக்சாஸ் மாகாணம் சதன் ஸ்பிரிஸ்ங்ஸ் என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் காலை பிரார்த்தனை முடியும் போது துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்களை பார்த்து சரமாரியாக சுட்டார். இதில் பலர் குண்டு தாக்கி சுருண்டு விழுந்தனர், மேலும் சிலர் காயங்களுடன் அலறியவாறே தப்பி ஓடினர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு வந்தனர். கொலையாளியும் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லாஸ்வேகாஸில் சில மாதங்களுக்கு முன் இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் இறந்திருந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருந்தனர். இந்நிலையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது அமெரிக்காவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement