கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அவரை களத்தில் சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவது உறுதி என்றும் விரைவில் கட்சி பெயரை அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை பேசும்போது, " வெற்றிடம் இருப்பதை நாம் எல்லாம் வந்து நிரப்பிவிடலாம் என்ற மனக்கோட்டையோடு பலபேர் வந்து கொண்டிருக்கின்றனர். வரட்டும், களத்தில் இறங்கட்டும். அரசியல் கட்சிகளை சேர்ந்த நாங்களும் களத்தில் இருக்கின்றோம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பார்ப்போம். ஆனால் ஒன்று, இது திரைப்படம் அல்ல. ஒரு 100 நாட்கள் ஓடிய பின்பு அடுத்தபடத்தை தேடிச் செல்வதற்கு. அரசியல் என்பது உள்ளார்ந்து மக்களுக்கு சேவை செய்வது. உங்களுக்கு 1000 கொள்கைகள் இருக்கலாம். அதற்காக பிற கொள்கைகளை தவறாக பேசுவது, உங்களுக்கு விளம்பரம் வேண்டுமானால் தேடித் தரலாமே தவிர, மற்றவர்கள் மனதை புண்படுத்துவது சரியானது அல்ல. அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?