செந்தாலை நோயால் வாழை‌ விவசாயம் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் செந்தாலை நோய் தாக்குதலால் மலை வாழை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் மலை வாழை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். மலை வாழைக்கு அதிக மருத்துவக்குணம் உள்ளதால் மலை வாழைப்பழம் ஒன்று, 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கு அதிக வரவேற்பு உள்ளதால் இப்பகுதியில் இருந்து அதிக அளவில் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மலை பகுதியில் விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக மலை வாழையில் செந்தாலை நோய் தாக்குதலால் வாழை விவசாயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வாழை நடவு செய்து வாழை தார் போடும் நேரத்தில் இந்த நோய் தாக்குதலால் வாழைக்காய் உரிய பருவம் அடையாமல் தார் ஒடிந்து விடுவதால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும். மலை வாழையை தாக்கும் செந்தாலை நோயை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement