இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று அகில இந்திய இந்து மகாசபா தெரிவித்துள்ளது.
பிரபல வார இதழ் ஒன்றில் கமல் எழுதி வரும் தொடரில், “இந்து தீவிரவாதம் இல்லை என்று இனியும் சொல்ல முடியாது என்றும், வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், “நடிகர் கமல் மற்றும் அவரைப் போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் மற்றவர்களுக்கு பாடம் கிடைக்கும்” என்று இந்து மகாசபா அமைப்பின் துணை தலைவர் பண்டிட் அசோக் சர்மா கூறியுள்ளார்.
மீரட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்து மத உணர்வுகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்த புனித பூமியில் வாழ உரிமையில்லை. அவர்களுடைய கருத்துக்களுக்காக கொல்லப்பட வேண்டும். கமல் ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் படங்களை அனைத்து கட்சி உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டும். அனைத்து இந்திய மக்களும் கமலின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது” என்று தெரிவித்தார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு