கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவலர்கள் பணியிடை நீக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போபாலில் 19வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், வழக்குப்பதிவு செய்ய மறுத்த 5 காவல்துறையினர்
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

போபாலை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகி வருகிறார்.வழக்கம் போல் பயிற்சி மையத்திற்கு சென்ற அந்த மாணவி இரவு 7 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு நபர்களால் அந்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். போபாலில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் சாலையின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து புகார் அளிக்க சென்ற போது 3 காவல்நிலையங்களில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலியல் வன்கொடுமை சம்பவம் ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நடைப்பெற்றதால் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவல்துறையினர் 5பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement