இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது: கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement

பிரபல தமிழ் வார இதழில் கமல் எழுதி வரும் தொடர் கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறியுள்ளார். இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறியுள்ளார்.

வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நம்பிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழகம் சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதா‌ணமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும், இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாக கேரளா திகழ்கிறது என்றும் அவ்வார இதழில் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement