அரிசி மூட்டைகளை அலட்சியமாக கழிவுநீரில் போட்டுவிட்டு எடுத்துச்சென்ற கொடுமையான சம்பவம் ஒன்று நெல்லையில் நடந்துள்ளது. அதனை பற்றி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தன் எதிரொலியாக அதுதொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையில் இருந்து நெல்லையில் உள்ள கூட்டுறவு பேரங்காடிக்கு பொது விநியோகத்திற்காக அரிசி உள்ளிட்ட மூட்டைகளை லாரி ஒன்று எடுத்துச் சென்றது. அப்போது சாலையின் பெரிய பள்ளம் ஒன்றை லாரி கடக்க நேரிட்டது. அப்போது கொஞ்சமும் தயங்காமல் லாரியில் இருந்த அரிசி மூட்டையை கீழே இறக்கி கழிவுநீரும், மழைநீருமாக கலந்து கிடந்த தண்ணீரில் போட்டனர். அந்த அரிசி மூட்டையின் மீது லாரி ஏறி பள்ளத்தை கடந்த நிலையில், கிழிந்துவிட்ட அரிசி மூட்டைக்குள் மீண்டும் அரிசியை அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றனர். அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் கூட்டுறவு அங்காடிப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கேள்வியை எழுப்பியது.
இந்தச் செய்தி புதிய தலைமுறையில் வெளியானதையடுத்து, நடவடிக்கை எடுத்துள்ள பாளையங்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, லாரி ஒப்பந்ததாரருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும் தற்காலிக பணியாளர் தங்கராஜ், லாரி லோடு மேன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நகர்வு உதவியாளர் தங்கதுரை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?