ஜப்பானில் உள்ள குடியிருப்பு பகுதியில், குளிர்சாதனப் பெட்டியினுள் 2 மனித தலைகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பான் நகர டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் குளிர்சாதன பெட்டி ஒன்று தனியாக கிடந்துள்ளது. இதனை திறந்து பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காரணம், அதில் வெட்டப்பட்ட நிலையில் 2 மனித தலைகள் இருந்துள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த குடியிருப்பு பகுதியில் பூட்டப்பட்ட நிலையில் இருந்த வீட்டை உடைத்து சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டினுள் இறந்த நிலையில் 7 சடலங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் ஷிராய்ஷி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொல்லப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பூட்டப்பட்டு இருந்து வீட்டினுள் இறந்த நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் டோக்கியோவில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!