கொள்ளையர்களை பிடிக்க உதவிய கடை உரிமையாளருக்கு பாராட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரவாய‌ல் பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உதவிய கடை உரிமையாளரை காவல்துறையினர் பாராட்டி கவுரவித்தனர்.


Advertisement

சென்னை மதுரவாயல் பகுதியில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் அதி‌கரித்து வந்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.‌ இந்நிலையில் அப்பகுதியில் கடை வைத்துள்ள ஜோசப் ஞானசேகரன் என்பவர் கொள்ளையர்களை அடையாளம் காணும் வகையில், தனது கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். இதனால் கடையில் பொருத்தப்பட்டிருந்த ‌சிசிடிவி கேமரா மூலம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் தங்களுக்கு உதவியதற்காக கடை உரிமையாளர் ஜோசப் ஞானசேகரனுக்கு மதுரவாயல் காவல் உதவி ஆணையர் ஜான் சுந்தர் உள்ளிட்ட ‌காவல்துறை அதிகாரிகள்‌ பாராட்டு தெரிவித்தனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement