[X] Close >

கிரண்பேடி ஆய்வு செய்ய எதிர்ப்பு: அதிமுகவினர் கைது

Pudhuchery-Governor-Inspection--ADMK-Followers-Arrest

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கவில்லை என கூறி
கருப்பு கொடி காட்ட முயனற அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

முத்தியால்பேட்டை தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட மீன்சந்தையை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இன்று காலை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கூடிய அதிமுகவினர் தொகுதிக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதியளிக்காத கிரண் பேடி புதிய சந்தையை ஆய்வு செய்யக்கூடாது என கூறி கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். அப்போது துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அந்த வழியாக வந்தபோது அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். 

அப்போது சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டணின் சட்டையை பிடித்து காவல்துறை கண்காணிப்பாளர் வேங்கடசாமி  வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அங்கு வந்த கிரண் பேடி புதிய மீன் சந்தையை ஆய்வு செய்தார். அதிமுகவினர் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close