பேட்டரி கார் அளிக்க மறுப்பு: ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிக்கு நடந்த கொடூரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் நடைமேடை வரை மாற்றுதிறனாளி ஒருவரை அழைத்துச் செல்ல பேட்டரி வாகனத்தை அனுமதிக்க மறுத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


Advertisement

சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தீபக் நாதன் என்பவர் சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். இந்த ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தின் 5-வது பிளாட்பாரத்திலிருந்து புறப்பட இருந்தது. இந்தநிலையில் அந்த பிளாட்பாரத்திற்கு செல்ல தீபக் நாதன் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவையை கோரியுள்ளார். ஆனால் அந்த பிளாட்பாரத்திற்கு பேட்டரி கார் செல்லாது என நிர்வாகம் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனிடையே 5-ஆவது பிளாட்பாரத்திற்கு பேட்டரி கார் இயக்குவதில் பிரச்னை ஏதும் இல்லை என நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக தீபக் நாதன் கூறியுள்ளார். எனினும் தனக்கு தற்போது பேட்டரி கார் வசதி தற்போது மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement