தமிழ் சினிமாவைப் பார்த்து, இந்தி சினிமாதுறை கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தி நடிகர் அக்ஷய் குமார் சொன்னார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் துபாயில் நடந்தது.
விழாவில் அக்ஷய் குமார் பேசும்போது, ’ரஜினி சார்தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தில் அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி. இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. நான் இந்தியில் 130 படங்களில் நடித்திருக்கிறேன். ’2.ஓ’ எனக்கு 131-வது படம். 130 படங்களில் நடித்தபோது ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம் கொஞ்சம் கற்றிருக்கிறேன். ஆனால், அதன் மொத்தத்தையும் இந்த ஒரு படத்தில் கற்றுக்கொண்டேன். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. வேலையில் அவர்களின் ஒற்றுமை, மற்றவர்களின் திறமையை மதித்தல் போன்றவற்றை இந்தி சினிமா கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
விழாவில் ரஜினி, எமி ஜாக்சன், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், ரஜினியின் குடும்பத்தினர், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவை இந்தியில் இயக்குனர் கரண் ஜோஹர், தமிழில் ஆர்.ஜே.பாலாஜி, தெலுங்கில் ராணா தொகுத்து வழங்கினர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!