‘அமித்ஷா கூட்டத்தில் கோஷம் போட ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள்’: வைரலாகும் ஆடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் எதிர்ப்பு கோஷமிட 10 ஆயிரம் ரூபாய் பெற்றேன் என்று பட்டேல் சமுதாய தலைவர் நரேந்திர பட்டேல் கூறுவது போன்ற ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. 


Advertisement

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இருகட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜகவில் சேர ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பட்டேல் சமுதாய தலைவர் நரேந்திர பட்டேல் சமீபத்தில் குற்றம்சாட்டினார். பாஜகவில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே அவர் கட்சியில் இருந்து விலகினார்.

இந்தநிலையில், சூரத்தில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் பாஜக, அமித்ஷாவுக்கு எதிராக கோஷமிட 10 ஆயிரம் ரூபாய் பெற்றேன் என்று நரேந்திர பட்டேல் கூறுவது போன்ற ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் குஜராத் காங்கிரஸ் தலைவர் பாரத்சிங் சோலங்கியும் தன்னுடன் தொடர்பில் உள்ளதாக நரேந்திர பட்டேல் கூறூவது போல் உள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

இருப்பினும் இந்த ஆடியோ பதிவின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை. ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்று நரேந்திர பட்டேல் கூறியுள்ளார். மேலும், இது குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆடியோவில் உள்ள நரேந்திர பட்டேலின் குரல் தான் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜகதிஷ் பவ்சர் தெரிவித்தார். அதேபோல், இந்த ஆடியோ கிளிப்பில் உள்ள தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று சோலங்கி மறுப்பு தெரிவித்து இருந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement