அப்போ சுனில் கவாஸ்கர், இப்போ விராட் கோலி...சுந்தர் பிச்சையின் ஓபன் டாக்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கூகுள் தலைமை செயலதிகாரியான சுந்தர்பிச்சை தனது பேவரைட் கிரிக்கெட் வீரர்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.


Advertisement

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகக் கருதப்படும் கூகுளின் தலைமை செயலதிகாரியாக உயர்ந்து சாதித்தவர். இவர் மேற்குவங்க மாநிலம் கோரக்பூரில் உள்ள ஐஐடி நிறுவனத்தின் முன்னாள் மாணவராவார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுந்தர் பிச்சை, தான் பயின்ற கோரக்பூர் ஐஐடி மாணவர்களிடையே இன்று கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு நகைச்சுவை கலந்து அவர் அளித்த பதில்கள் அனைவரையும் கவர்ந்தது. உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்ற கேள்விக்குப் பதிலளித்த சுந்தர், கல்லூரி நாட்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவாஸ்கரின் ஆட்டம் தம்மை கவர்ந்ததாகவும், இப்போது விராட் கோலியின் திறமைகண்டு வியப்பதாகவும் கூறி மாணவர்களின் கைதட்டல்களைப் பெற்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement