உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் தவறுதலாக உயர்சாதியினர் வீட்டு வாளியை தொட்டதால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண்மணியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலன்ந்த்சாகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாவித்ரி தேவி. இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர். கடந்த வாரம் அந்த பகுதியில் வசித்து வரும் உயர் சாதி பெண் ஒருவரின் வீட்டு வாளியை தொட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தில் இருந்த அஞ்சு மற்றும் அவரின் மகன் ரோகித் ஆகியோர் சாவித்ரியை அடித்துள்ளனர். நிறைமாத கர்பிணியாக இருந்த சாவித்ரியை மீட்டு அந்த பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சாவித்ரி உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த உத்தரப்பிரதேச காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று சாவித்ரியின் உடல் பிரேதச பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடன் ஒப்டைக்கப்பட்டுள்ளது. சாவித்ரியின் தலை மற்றும் முதுகெலும்பு பகுதியில் அடித்ததற்கான அடையாளங்கள் அதிகளவில் இருப்பதாகவும், வயிற்றில் கடுமையாக உதைக்கப்பட்டதால் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டதாக மருத்துவமனை அறிக்கைக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய அஞ்சு மற்றும் ரோகித்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தவறுதலாக வாளியை தொட்டதால் கர்பிணி பெண் அடித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை