Advertisement

பேனர் இல்லை என்றால் வேட்பாளர்களை எப்படி அறிமுகப்படுத்துவது?: சீமான் கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பேனரில் உயிரோடு இருப்பவர்களின் படம் இடம்பெறக்கூடாது என்றால் சாதாரண வேட்பாளர்களை எப்படி அறிமுகப்படுத்துவது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பதாகைகளே வேண்டாம் என்ற கலாச்சாரத்தை நான் ஏற்கிறேன். ஆனால் உயிருடன் இருப்பவர்களின் படங்களை பதாகைகளில் வைக்கக் கூடாது என்பது ஏற்புடையதாக பார்க்கவில்லை. குறிப்பிட்ட இடங்களை கொடுத்து பதாகைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளியுங்கள். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பதாகைகளை வைக்க வேண்டும் என்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். ஒரு போராட்டம் நடத்துகிறோம் என்றால் அதனை எப்படி மக்களுக்கு தெரிவிப்பது. மக்கள் அரசியலில் தேர்தல் அரசியலில் அறிமுகம் மிகவும் அவசியமாக உள்ளது. அப்படியென்றால் ரஜினி காந்த், கமல், அஜித் உள்ளிட்ட பிரபலமானவர்களுக்கு தான் வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement