2.ஓ வில் ஏன் அர்னால்ட் இல்லை? :ஷங்கர் பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2.ஓ திரைப்படத்தில் அர்னால்ட் ஸ்வார்ஸேநேக்கர் ஏன் இடம் பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.


Advertisement

ரஜினியின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 2.ஓ. இந்தப் படத்தில் அர்னால்ட் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஷங்கர் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியாகி இருந்த ஐ படத்தின் ஆடியோ விழாவிற்கு இவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆகவே அவர் நடிப்பது உறுதியானது என நம்பப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இது குறித்து பேசிய ஷங்கர், “அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் இறுதியாக ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் சில காரணங்களால் அது நடக்கவில்லை.” என கூறியுள்ளார்.

ஐ இசை வெளியிட்டின் போது அர்னால்ட் அவமரியாதையாக நடத்தப்பட்டத்தால் அவர் அந்நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறி சென்றுவிட்டார் என அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement