நடிகை அசின் மற்றும் தொழிலதிபர் ராகுல் சார்மாவிற்கு பிறந்துள்ள பெண் குழந்தையுடன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நடிகை அசினுக்கும், தொழிலதிபர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த அசினுக்கு, இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அசின்-ராகுல் ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அசின், இன்று தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னுடைய பிறந்தநாள் அன்று, தனது மகள் ஒரு அழகான பரிசாக கிடைத்ததில் அளவில்லாத மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை அசின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் அசின் மற்றும் ராகுலை சந்தித்த அக்ஷய் குமார், குட்டி அசினுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர், குட்டி தேவதையை தந்த அசின் மற்றும் ராகுலுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!