[X] Close >

தமிழகத்தில் டெங்கும் லஞ்சமும்தான் முதலிடத்தில் இருக்கிறது: விஜயகாந்த்

Dengue-and-corruption-in-first-place-of-TamilNadu--Vijayakanth

தமிழகத்தில் டெங்கும், லஞ்சமும்தான் முதலிடத்தில் இருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி விழுப்புரத்தில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், கந்துவட்டிக் கொடுமையை தடுக்க அரசு தவறிவிட்டதாக தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து நாடகமாடுவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் விமர்சித்தார். அவர் மேலும் பேசும்போது, "எந்த நேரமும் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஜெயலலிதாதான் கந்துவட்டி கொடுமையை அறவே ஒழிப்பேன் என சொன்னார். தற்போது கந்துவட்டிக் கொடுமையை தடுக்க அரசு தவறிவிட்டது" என்றார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close