[X] Close

கரூரில் விசிக- பாஜகவினர் இடையே கைகலப்பு

Subscribe
VCK--BJP-cadres-clash-in-Karur

கரூரில் பாரதிய ஜனதா கட்சியினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். மெர்சல் யுத்தம் தற்போது பாரதிய ஜனதா-விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் யுத்தமாக மாறியுள்ளது.


Advertisement

மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக திருமாவளவன் விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்த தமிழிசை சவந்தரராஜன், திருமாவளவன்தான் அதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துகளை செய்வதாக கூறியிருந்தார். இதனால் பாரதிய ஜனதாவிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் வலுத்தது.

இதன் தொடர்ச்சியாக கரூரில் பாரதிய ஜனதாவின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறும் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். கருப்புத் துணி காட்டி முழக்கங்களை எழுப்பியவாறே கூட்டம் நடைபெறும் மண்டபத்தை முற்றுகையிட அவர்கள் முயன்றனர். இதையறிந்த பாரதிய ஜனதாவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் மோதலில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினரிடையே கை கலப்பு ஏற்பட்டது. இதில் காவல்துறையினரின் வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.


Advertisement

போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்து பாரதிய ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close