டெல்லியில் ஒரே வாரத்தில் 650 பேருக்கு டெங்கு பாதிப்பு

டெல்லியில் ஒரே வாரத்தில் 650 பேருக்கு டெங்கு பாதிப்பு
டெல்லியில் ஒரே வாரத்தில் 650 பேருக்கு டெங்கு பாதிப்பு

டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் 650 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி மாநகாரட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இந்த ஆண்டில் மட்டும் 5,870 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 650 பேர் டெங்கு பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகவும், மற்ற ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், மழைக்காலம் நிறைவடைந்தவுடன் இந்த தாக்கம் குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நன்னீரிலும், தேங்கிய நிலையில் உள்ள நீர்நிலைகளிலும் வளரக்கூடியவை என்பதால், அதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்குன்குன்யா காய்ச்சலை பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com