புரோ கபடி லீக்: புனே, பாட்னா அணிகள் வெற்றி

Pro-Kabaddi--Puneri-Paltan-eliminate-UP-Yoddha

புரோ கபடி லீக் தொடரின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களில் புனேரி பல்டன்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. 


Advertisement

மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புனே அணி, உத்தரபிரதேஷ் யோத்தா அணியை இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் போராடி வென்றது. புனே அணியில் தீபக் ஹூடா 10 புள்ளிகளும், உத்தரபிரதேச அணியில் ரிஷாங்க் தேவதிகா 15 புள்ளிகளும் எடுத்தனர்.

மற்றொரு போட்டியில் நடப்புச் சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அபார ஆற்றலை வெளிப்படுத்திய பாட்னா அணி 69 - 30 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. நட்சத்திர வீரர் பர்தீப் நார்வல் 34 புள்ளிகள் குவித்து அசத்தினார். நேற்றைய போட்டிகளில் தோல்வியுற்ற உத்தரபிரதேஷ் யோத்தா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெளியேறன. இன்று நடைபெறும் அடுத்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பாட்னா அணியும், புனே அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement