[X] Close

சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக ஆரசு சார்பில் 3 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியை கொலை செய்த குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும்

கூறப்பட்டுள்ளது.


Advertisement

போரூர் அருகேயுள்ள மதனந்தபுரம் மாதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியினரின் மகளான ஹாஷினி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.‌வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி

காணாமல் போனதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதே குடியிருப்பில் மேல்தளத்தில் வசித்து வந்த தன்வந்த் என்பவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளார்.‌ இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவீர விசாரணையில் இறங்கிய போது, சிறுமி ஹாஷினியை பாலியில் பலாத்காரம் செய்ததுடன் தலையணையால் அழுத்திக் கொலை செய்ததாக அவர் கூறினார்.பின்னர் உடலை தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலைக்கு எடுத்துச் சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் கூறினார்.


Advertisement

இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் கிடந்த ஹாஷினியின் உடலைக் கைப்பற்றினர்.

தன்வந்தை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்

வழக்குகள் பதிவு செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement