[X] Close >

ஹைதராபாத் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி

India-s-bowlers-take-2-sessions-of-Day-5-to-bowl-a-gutsy-Bangladesh-out-and-win-the-Only

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


Advertisement

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 204 ரன்கள் எடுத்திருந்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேசம் இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். வங்கதேசம் 388 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் அதிகபட்சமாக 127 ரன்கள் எடுத்தார்.


Advertisement

வங்கதேசத்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் புஜாரா அவுட்டாகாமல் 54 ரன்கள் எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸ் ஸ்கோரையும் சேர்த்து இந்தியா 459 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

வங்கதேச அணியின் வெற்றிக்கு 459 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் வங்கதேசம் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 4 விக்கெட்டுகளை கைபற்றினர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close