திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்: ஆட்சியர் நடவடிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த திருவாரூர் ரயில் நிலையத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 15 நாட்கள் ஈடுபட வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் நிர்மல்ராஜ், கொசு உற்பத்தியாகக் காரணமாக இருப்பதாகக் கூறி ரயில் நிலையத்திற்கு 10,000 ரூபாய்‌ அபராதம் விதித்தார். திருவாரூர் மாவட்டத்தில் சுகாதாரத்தை பேணி காக்காத 1000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை 2 லட்சத்து 54,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement