மெர்சல் வசனங்களில் தவறில்லை: தணிக்கைக் குழு அதிகாரி விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மெர்சல் படத்தில் தவறான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மண்டல தணிக்கைக் குழு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்பட சர்ச்சை இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்விட்டர் வலை பக்கத்தில் மெர்சல் வெர்சஸ் மோடி என ட்ரெண்ட் ஆகி வருகிறது. திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தியாவுடன் சிங்கப்பூரை ஒப்பிடும் காட்சிகள், ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை தொடர்பான காட்சிகளுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். 

இந்த நிலையில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்பட காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வசனங்கள் இல்லை என்று மண்டல தணிக்கைக் குழு அதிகாரி மதியழகன் கூறியுள்ளார். மேலும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றால் மீண்டும் அனுமதி பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கருத்துரிமை அடிப்படையிலே வசனங்கள் உள்ளதாகவும், ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவும் இல்லையென்றும் மதியழகன் கூறினார். மெர்சல் படத்திற்கு அனுமதிஅளித்த அதிகாரிகள் பதவிவிலகவேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement