தனது காலில் படப்பிடிப்பின் போது அடிப்பட்டு விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
கடற்கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லக்ஷ்மி ராய். நான் அவன் இல்லை, வாமனன், நான் அவன் இல்லை 2 என பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தவர். பிறகு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு நடிப்பதற்காக சென்றார். அதன் பின் தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிகொண்டார். தற்சமயம் பாலிவுட்டில் அவர் பங்கு பெற்ற படப்பிடிப்பு ஒன்றில் அவரது காலில் அடிப்பட்டுள்ளது. மூட்டு பகுதியில் அடிப்பட்டு ரத்தம் கசியும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். ஒரு சண்டைக்காட்சியின் போது அடிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. யாரும் வருந்த வேண்டாம். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?