சுவாசிப்பதே சிரமம்: பட்டாசு வெடித்ததால் காற்றில் நுண்துகள்கள் அதிகரிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் காற்றில் கலக்கும் நுண்துகள்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகரித்து விட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.


Advertisement

தீபாவளி பண்டிகையை சென்னை முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால் சென்னை முழுவதுமே புகைமூட்டமாக மாறியதுடன், மக்கள் சுவாசிக்கும் காற்றுடன் வெடி வாடையும் சேர்ந்தே சென்றது. இந்தச் சூழலில் பட்டாசு வெடித்ததால், காற்றில் கலக்கும் நுண்துகள்கள் அதிகரித்துள்ளதா என்பதை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் கிண்டி, செளகார்பேட்டை, மணலி என மூன்று இடங்களில் மாசு அளவீடு எடுக்கப்பட்டது. அந்த ஆய்வில் காற்றில் கலக்கும் நுண்துகள்களின் எண்ணிக்கை 263 ஆக அதிகரித்திருப்பது தெரிய‌‌வந்தது. இந்த அளவு, சுவாசிப்பதற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்று மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பிலும் சென்னையில் ஐந்து இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் இன்று மாலையில் வெளியிடப்படும் என மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement