[X] Close >

விராத் கோலி தலைமை: தினேஷ் கார்த்திக் பெருமை

Proud-of-to-be-part-of-present-India-team-led-by-Virat-Kohli--says-Dinesh-Karthik

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் பங்கேற்பதில் பெருமையடைகிறேன் என்று தினேஷ் கார்த்திக் சொன்னார்.


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டிருந்தார் தினேஷ் கார்த்திக். ஆனால் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில், லோகேஷ் ராகுலுக்குப் பதில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ‘இப்போதைய இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்படுகிறது. பும்ரா, புவனேஷ்வர்குமார் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். விராத் கோலி சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். அவர் சிறந்த வீரர். பாசிட்டிவாக எதையும் யோசிப்பவர். அவர் தலைமையில் அணியில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் வழக்கமாக 4 வீரராக களமிறங்கி ஆடுவேன். அந்த இடத்தில் ஆடுவது எனக்கு பிடித்தமானது. தமிழ்நாட்டு அணியிலும் பல சர்வதேசப் போட்டிகளிலும் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி இருக்கிறேன். இதே இடத்தில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டால் நன்றாக ஆடுவேன். அதோடு எந்த இடத்திலும் என்னால் சிறப்பாக ஆடமுடியும் ’ என்றார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close