[X] Close >

5 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவர் உடல் மீட்பு

Trichy-youngster-fell-from-hill

திருச்சி சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் கிரிவலம் சென்று, 5 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் உடல் மீட்கப்பட்டது.


Advertisement

திருச்சி மாவட்டம் முசிரி அருகே உள்ள சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஆபத்தான முறையில் கிரிவலம் சென்ற இளைஞர் 5 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். அவர் விழுந்த வீடியோ காட்சி, செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அத்துடன் உடலை கண்டுபிடிக்க உறவினர்கள் யாரேனும் புகார் அளிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எழுந்த கோரிக்கையை அடுத்து, இளைஞரின் உடலை மீட்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. இதன்மூலம் பள்ளத்தில் விழுந்தவர் முசிறி பெரியார் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. சடலம் தாமதமாக மீட்கப்பட காவல்துறையின் மெத்தனமே காரணம் என உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close