காஞ்சிபுரத்தில் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய 5,000 ரூபாய் கையூட்டு பெற்ற ஆயத் தீர்வை உதவி ஆணையரை, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயத்தீர்வை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி ஆணையராக இருப்பவர் சீனுவாசன். காஞ்சிபுரம் மார்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்தக் கடையை இடமாற்ற செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து அக்கடையின் மேலாளர் நிர்மல்குமார் கடையை இடமாற்றம் செய்ய, உதவி ஆணையர் சீனுவாசனை அணுகியுள்ளார். அதற்கு சீனுவாசன் கடையை இடமாற்றம் செய்ய ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ரூ.5,000 லஞ்சம் தருவதாக நிர்மல்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து நிர்மல்குமார் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.5,000 ரூபாய் நோட்டுக்களை நிர்மல்குமாரிடம் கொடுத்து அதனை சீனுவாசனிடம் கொடுக்குமாறு கூறினார். இந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சென்று நிர்மல்குமார், உதவி ஆணையர் சீனுவாசனிடம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் உதவி ஆணையர் சீனுவாசனை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!