எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் தமிழக அரசு சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாலை நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, ரத்த பரிசோதனை முகாமும் நடைபெற்றது. மதியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்த பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ரத்த பரிசோதனையின் முடிவுகள் உடனடியாக தெரிவிக்கப்படுவதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி